டில்லி

டந்த 2016-18 வரை ரெயில்கள் மோதி 49 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

இந்திய அரசு வனவிலங்குகளை காப்பதில் பெறும் அக்கறை எடுத்து வருகிறது.  இதற்காக தனி அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.      காடுகளில் மான், புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.   பல மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகள் விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் வனவிலங்குகள் விபத்தினால் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது.    இது குறித்து மாநிலங்கள் அவையில் உறுப்பினர் சுப்பிரமணி ரெட்டி எழுப்பிய கேள்விக்கும் வனத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.  அந்த பதிலி,ல், “கடந்த 2016 முதல் 2018 வரை 49 யானைகள் ரெயில் மோதி இறந்துள்ளன.   இவற்றில் 37 யானைகள் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இறந்துள்ளன.

அதே மூன்று வருட கால கட்டங்களில் 11 புலிகளும் 13 சிங்கங்களும் சாலை மற்றும் ரெயில் விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளன.   குஜராத் மாநிலத்தில் உள்ள அமரேலி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம்  வருடம் சாலை மற்றும் ரெயில் விபத்துக்களில் மூன்று சிங்கங்களும் அதற்கு முன்பு 10 சிங்கங்களும் விபத்தில் இறந்துள்ளன.

இந்த விலங்குகள் மரணத்தை குறைக்க அரசு கடுமையாக முயன்று வருகிறது.   விலங்குகள் குறிப்பாக யானைகள்  தொங்கும் மின்சார கம்பிகளால் விபத்து ஏற்பட்டு மரணம் அடைகின்றன.   அதை ஒட்டி வனப்பகுதிகளில் தலைக்கு மேல் மின்சார கம்பிகள் செல்வதை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   அத்துடன் ரெயில்வே தண்டவாளங்களை விலங்குகள் கடக்கும் போது ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.