சென்னை:
தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊதிய ஒப்பந்தம் மற்றும் நிலுவை தொகை தொடர்பாக அரசுடன் தொழிற் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 48 தொழிற்சங்கங்கள் பங்கு பெற்று வருகின்றன.
ஆனால், அரசு விதிகளின்படி அதிகப்படியாக 12 தொழிற்சங்கங்கள் மட்டுமே இதுபோன்ற பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள முடியும்.
இந்நிலையில், அரசு போக்குவரத்துக்காக ஓட்டுனர் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தகுதி பெற்ற போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், இதுகுறித்து போக்கு வரத்துத்துறை செயலாளர் 2 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.