க்னோ

ற்போது நடந்து வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையை  முன்னிட்டு 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கடந்த 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.  இதையொட்டி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்கு இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும். வரும் 29 ஆம் தேதி மவுனி அமாவாசை வருவதால் இதற்கு திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பயணிகளின் வசதிக்காக வடக்கு ரயில்வே, சிறப்பு ரெயில்களை இன்று அறிவித்து உள்ளது.

லக்னோ மண்டல ரயில்வே மேலாளர் சத்யேந்திர மோகன் சர்மா,

“மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் நகருக்கு 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரெயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை இருக்கும். கோடிக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள ஏதுவாக இந்த வசதியை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இவற்றில் லக்னோ நகருக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை சற்று அதிக அளவில் இருக்கும். தற்போது அயோத்தி, லக்னோ, ஜான்பூர் மற்றும் பனாரஸ் ஆகிய வழிகள் உள்பட குறுகிய தொலைவுகளுக்காக 11 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.”

என அறிவித்துள்ளார்.