சென்னை

நேற்று தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

தமிழக ஆளுநர் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்க்கும் போது விருந்தில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா தேநீர் விருந்தில் கலந்துகொள்ள திமுக, அதிமுக, பாஜக, தவெக, நதக, விசிக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. ஆனால்  தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக தெரிவித்து, தமிழக அரசு மற்றும் திமுக தேநீர் விருந்தை புறக்கணித்தன. அத்துடன், விசிக, நாதக, தவெக, மதிமுக கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.

எனவே நேர்று மாலை ஆளுநர் மாளிகையில் தொடங்கிய தேநீர் விருந்தில், பாஜக, அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர்.