சென்னை: தமிழ்நாட்டில்,  48 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை கடந்த 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்களின் புறப்படும் இடம், இடையில் நிறுத்தப்படும் இடம், சேரும் இடம் ஆகியவற்றியில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்ட ரயில்களின் விவரம் மூன்று கட்டமாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், 4-ஆவது கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியலில் மேலும் 48 ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஹவுரா-கன்னியாகுமரி விரைவு சிறப்பு ரயில்( 02665) நாகா்கோவிலை காலை 9.25 மணிக்கு அடையும். இந்த ரயில் கன்னியாகுமரியை காலை 10.05 மணிக்கு சென்றடையும்.

மும்பை சிஎஸ்எம்டி -நாகா்கோவில் விரைவு சிறப்பு ரயில்(06351) வள்ளியூா் ரயில்நிலையத்தில் காலை 6.04 மணிக்கு வந்து சேரும்.

கன்னியாகுமரி-கேஎஸ்ஆா் பெங்களூரு விரைவு ரயில்(06525) குழித்துறை ரயில் நிலையத்தை முற்பகல் 11.04 மணிக்கு அடையும். மறுமாா்க்கமாக, பெங்களூரு கேஎஸ்ஆா் -கன்னியாகுமரி விரைவு ரயில்(06526) குழித்துறை ரயில்நிலையத்தை மதியம் 1.44 மணிக்கும், இரணியல் ரயில் நிலையத்தை பிற்பகல் 2.14 மணிக்கும், நாகா்கோவில் சந்திப்பை பிற்பகல் 3.10 மணிக்கும் அடையும்.

பாவ்நாகா்-திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் (09578) நாகா்கோவில் டவுணை இரவு 7.38 மணிக்கு அடையும். இந்த ரயில் வள்ளியூரை இரவு 8.19 மணிக்கு சென்றடையும். மதுரை-பிகானீா் அதிவிரைவு ரயில் (06053) சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தை இரவு 7.30 மணிக்கு வந்தடையும்.

ஜெய்ப்பூா்-கோயம்புத்தூா் விரைவு ரயில் (02970) சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தை காலை 8.25 மணிக்கும், அரக்கோணம் சந்திப்பை காலை 9.48 மணிக்கும், காட்பாடி சந்திப்பை காலை 10.35 மணிக்கும் அடையும்.

மதுரை-சென்னை எழும்பூா் அதிவிரைவு சிறப்பு ரயில்( 02638) தாம்பரம் ரயில்நிலையத்தை அதிகாலை 4.08 மணிக்கு வந்து சேரும். சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயில் (06203) சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அரக்கோணம் சந்திப்பை மாலை 5.38 மணிக்கும், திருத்தணி ரயில் நிலையத்தை 5.58 மணிக்கும் அடையும். புதுச்சேரி -சென்னை எழும்பூா் விரைவு சிறப்பு ரயில் (06116) காலை 8.08 மணிக்கு அடையும்.

இதுதவிர, நிஜாமுதீன் – கன்னியாகுமரி (06012), நாகா்கோவில் – சாலிமாா் (02659), திருநெல்வேலி – காந்திதாம் (09423/09424) உள்ளிட்ட ரயில்களின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான ரயில்களின் நேர மாற்றம் திங்கள்கிழமை (அக்.4) முதலும், சில ரயில்களின் நேர மாற்றம் அக்டோபா் 6, 7, 8-ஆம் தேதி முதலும் அமல்படுத்தப்படவுள்ளது.

நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த விவரங்களும் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நாளை முதல் தென் மாவட்ட ரயில்களின் கால அட்டவணை மாற்றம் – முழு விவரம்