சென்னை: தனது 46வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி தலைவர் மற்றும் அமைச்சராக உள்ள உதயிநிதிக்கு இன்று (நவம்பர் 27ஆம் தேதி ) 46வது பிறந்தநாள். இதையொட்டி, இன்று த மிழகம் முழுவதும் இளைஞரணி நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மூலம் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனது பிறந்தநாளையொட்டி, அமைச்சர் உதயநிதி தனது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, உதயநிதி, முதலமைச்சரிடம், குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள் என்ற புத்தகத்தை முதலமைச்சருக்கு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி மரியாதை செலுத்தினார்.