சென்னை:

திய நிலுவைத் தொகை, ஓய்வூதியம் உள்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அmரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இன்றுக்குள் வேலைக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது.

ஆனால், நாங்கள் எதற்கும் தயார் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு சஸ்பென்டு செய்யப்பட்டுள்ள 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக  பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்து உள்ளார்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள், காலியாக உள்ள 450 இடங்களில் பணியிட மாறுதல் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.