சென்னை:

தமிழகத்தில் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட 45 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 6 ஏ.எஸ்.பி.க்களுக்கு எஸ்.பி.,களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை எஸ்.பி. விஜயேந்திரபிதாரி மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு எஸ்.பி.யாக ராதிகா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக லலிதாலட்சுமி, திநகர் துணை கமிஷனர் சரவணன் மயிலாப்பூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார் .

தூத்துக்குடி எஸ்.பி.யாக மகேந்திரன், திருச்சி எஸ்.பி.யாக கல்யாண், கோவை எஸ்.பி. ரம்யாபாரதி பொருளதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை துணை கமிஷனராக மயில்வாகணன், புதுக்கோட்டை எஸ்.பி.யாக செல்வராஜ், திநகர் துணை கமிஷனராக அரவிந்தன், மதுரை பொது விநியோக சிஐடி கண்காணிப்பாளராக ரூபேஸ்குமார் மீனா, மதுரைஅமலாக்க துறை பிரிவு கண்காணிப்பாளராக அரவிந்த்மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை குற்றப்பிரிவு துணை கமிஷனராக பெருமாள், சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக மகேஷ்வரி, நெல்லை துணை கமிஷனராக சுகுணாசிங், நாதா சென்னை சிபிசிஐடி அதிகாரியாகவும், திருச்சி மாநகர துணை கமிஷனராக சக்திகணேசன், நாகை கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி.யாக சின்னசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது.