சென்னை:  446 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் தமிழக அரசு, கோத்ரேஜ் நிறுவனம் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்  புரிந்துணர்வு ஒப்பந்தம்  இன்று கையெழுத்தானது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டில் ரூ.515 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலை நிறுவ  தமிழ்நாடு அரசு கோத்ரேஜ் ஆலை நிர்வாகத்தினர் இடையே ஒப்பந்தம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.  இந்த  புதிய உற்பத்தி ஆலை மூலம் 446 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு மற்றும் கோத்ரேஜ் குழுமத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட் நிறுவனம் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது தற்போது தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட் நிறுவனம் 515 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாடு அரசு மற்றும் கோத்ரேஜ் குழுமத்திற்கு இடையே மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை கூடுதல் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.