சென்னை: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5,161 ஏக்கரில் ரூ.342.60 கோடி மதிப்பில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை சார்பில் ரூ.342.60 கோடி மதிப்பில் மாமல்லன் நீர்த்தேக்கம் கட்டப்படவுள்ளது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது என பெருமிதத்துடன் கூறினார். திமுக ஆட்சியில் அணைகள் கட்டவில்லை என்பது பொய். இதுவரை திமுக ஆட்சிகளில் 43 நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. அதாவது, 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என்றவர், நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் அமைவது பழந்தமிழரின் மரபு. சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளுக்காக நாம் செய்த பணிகளில் வரலாற்றில் இந்நிகழ்வு இடம்பெறும் என்றார்.
மேலும், திமுக ஆட்சியில் நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படுகிறது. காவிரி பகுதியில் ரூ.459 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது” என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]