ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசியர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, வரும் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசியர்கள் பள்ளிக்கு வராததை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அவ்வாறு மணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டத்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கடந்த சனிக்கிழமைக்குள் பணிக்கு திரும்புமாறு, அவ்வாறு பணிக்கு வராத ஆசியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனறும் தமிழக அரசு அறிவித்தது. எனினும், அரசின் இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காத ஆசியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து பணிக்கு திரும்பான ஆசியர்களை மாவட்ட வாரியாக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வருகின்ற 28ம் தேதிக்குள் பணிக்கு திரும்பும் ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும், இருப்பினும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்ளுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.