சென்னை,
சென்னை நாடு முழுவதும் உயர்படிப்புகள் படிக்க அகில இந்திய அளவில் நுழைவு தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதுபோன்ற தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள அகில இந்திய அளவிலான இதுபோன்ற தேர்வை, தமிழக பாடத்திட்டத்தின்படி படித்துவரும் மாணவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. மேலும் இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் அமல்படுத்தி உள்ள நீட் தேர்வு காரணமாக, தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பாடத்திட்டத்த மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து, பாட திட்டம் மாற்றுவது குறித்து கல்வியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாண வர்களுக்கு பயிற்சிஅளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதற்காக மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.