சென்னை,

மிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா  போன்றவைகள் தடையைமீறி விற்பனை செய்யப்பட்ட புகாரில் ரூ.40 கோடி லஞ்ச பணம் கைமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்த வழக்கு காரணமாக, லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு குழு விசாரணையை தொடங்கி உள்ளது.

தடை செய்யப்பட்ட பான் மாலா,  :’குட்கா’ உள்ளிட்ட போதைப் பொருட்கள்  தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக,  விற்பனையாளர்களிடம், ரூ.40 கோடி வரை  லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜே.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இந்த வழக்கில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறை யினர் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை அவசியம் என கருத்து தெரிவித்தனர். ஆனால், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று அரசு கூறியதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் விஜிலென்ஸ் கமிஷனர் ஜெயக்கொடி மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவுக்கு  கூடுதல் டி.எஸ்.பி தலைமையில் 8 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், தங்களது விசாரணையை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக, குட்கா வியாபாரி மாதவராவ், மற்றும் ராஜேந்திரன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.