சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாயும் புலி’ படத்தின் 40 இயர்ஸ் இன்று.

1983 ம் ஆண்டு ஜனவரி 14 ம் தேதி வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் தொடர்ந்து 133 நாட்கள் ஓடியது.

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் 40 years of ‘பாயும் புலி’ குறித்த பதிவை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருணா குகன்.

பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளில் ரசிகர்களை மகிழ்விக்க முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது தமிழ் திரையுலகில் காலங்காலமாக பின்பற்றப்படும் நடைமுறை.

மூன்று தீபாவளி கண்ட படங்கள், 365 ஓடிய படங்கள், வெள்ளிவிழா படங்கள் என்ற வழக்கு ஒழிந்து ஒரேவாரத்தில் வசூலை வாரிசுருட்டிய படங்கள் என்ற நிலைக்கு இந்திய திரைப்படங்கள் தள்ளப்பட்டுள்ளது.

ரி-பீட் ஆடியன்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்குமளவிற்கு மாறியுள்ளது இன்றைய திரைப்படங்களின் தரம்.

திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்கவே என்ற பார்முலாவை திறம்பட கையாண்ட இயக்குனர்களில் ஒருவர் எஸ்.பி. முத்துராமன்.

ரஜினிகாந்த், கமலஹாசன் என்று இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்களையும் மாறி மாறி இயக்கி இருந்தாலும், ரஜினியை வைத்து 23 படங்களை இயக்கி இருக்கிறார்.

1982 ம் ஆண்டு கமலுக்கு ‘சகலகலா வல்லவன்’ தந்த கையோடு 1983 ம் ஆண்டு ரஜினிக்கு ‘பாயும் புலி’. அதே ஆண்டு ‘அடுத்த வாரிசு’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ ஆகிய வெற்றிப் படங்களையும் இயக்கினார்.

ஹாங்காங்-கில் தயாரான ‘தி 36த் சேம்பர் ஆப் ஷாலின்’ என்ற தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளியான படத்தின் சாயலில் ரஜினியை வைத்து ஸ்டைலான ஜூடோ சண்டை காட்சிகளை கொண்ட திரைப்படமாக ‘பாயும் புலி’ வெளியானது.

ராதா கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக நடித்திருந்தார். இளையராஜா இசையில் ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது மட்டுமன்றி சமீபத்தில் இந்த பாடல் ரீ-மிக்ஸ் ஆகவும் ஒலித்தது.