டில்லி,
4ஆண்டு சிறை தண்டனை எதிர்த்து சசிகலா அன் கோவினர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனை குறித்து சீராய்வு செய்ய வேண்டும் என்றும், சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று புதிய மனுவையும் சசிகலா தரப்பினர் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுமீது நேற்று விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது தள்ளுபடியாகுமா என்று இன்று உத்தரவு வெளியாகும் என கூறப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவராய் கோஷ், பாப்டே அமர்வு முன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசியலில் டிடிவி தினகரனுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.