தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தனியார் பேருந்தும் கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி,கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படகிறது.

கேரளாவில் ஆற்றில் மணல் எடுக்க, கனிம வளங்களை எடுக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளார், அம்மாநில தேவைக்கான கனம வளங்கள் தமிழ்நாட்டின் தென்மாவட்ங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.  இதனால் குறிப்பாக நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆறுகள், மலைகள் கொள்ளயைடிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு வருமானத்தை மட்டுமே நோக்கில் கொண்டு, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழித்து வருகிறது.  கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு கிராவல், ஜல்லிகற்கள், எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணல் சப்ளை செய்ய பல நிறுவனங்களுகக் ஒப்பந்தங்களை வழங்கி உள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு சுமார் 700 லாரிகளில் தமிழ்நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதுதொடர்பாக பல வழக்குகள் உள்ள நிலையிலும், கனிம வளங்கள் கொள்ளையடிப்பத தொடர்ந்துகொண்டேதான இருக்கின்றன.

ஏற்கனவே இதுதொடர்பான  மனுவை விசாரித்த தனி நீதிபதி, 10 சக்கரத்துக்கு மேற்பட்ட 700 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என உத்தரவிட்டார். பின்னர் இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இருந்தாலும் தடையை மீறி கனிக வளங்கள் எடுத்துச்செல்லப்படுவது அதிகரித்தே காணப்படுகறிது.

இந்த நிலையில்தான்,   தென்காசி – மதுரை சாலையில் குத்துக்கல்வலசை அருகே   தனியார் பேருந்தும் கனிம வளம் ஏற்றி  அதிவேகமாக  சென்ற லாரியும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் பேருந்தில் இருந்த 3 வயது குழந்தை உட்பட 4  பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசைப் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி மோதி, ஒரு குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ள செய்தி பெரும் மனத்துயர் அளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, லாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனிமவளக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அவற்றை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களின் விதிமீறல்களும அதிக அளவில் நடந்து வருகின்றன. குமரி மாவட்டத்திலும் இதுபோன்ற பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு தென்காசியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை புறந்தள்ளியும் கனிம வளங்களை கடத்தி வரும் இந்த வாகனங்களையும், கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் முதலாளிகளையும் எந்தவித நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல், அரசு வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் எந்தவித வளக்கொள்ளையும் நடைபெறக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், நடைமுறையில் இருக்கக்கூடிய விதிமுறைகளை கூட சரிவர செயல்படுத்தாதது அரசின் ஆட்சி திறமை இன்மையே காட்டுகிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு சரக்கு லாரிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.