பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் ஜனவரி 13 முதல் 17 வரை விடுமுறை என்பதால் நாளை ஜனவரி 12 ம் தேதி பொங்கல் பண்டிகை படங்கள் ரிலீசாகிறது.

கேப்டன் மில்லர், அயலான் தவிர விஜய்சேதுபதி, கத்ரினா கயிப் நடிப்பில் இந்தி மற்றும் தமிழில் உருவான மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்த மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்களும் வெளியாகிறது.

பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ள இந்த 4 படங்களில் கேப்டன் மில்லர், அயலான் இடையே போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.