செங்கல்பட்டு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி

Must read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.

சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து கல்பாக்கம் அருகே காத்தான்கடை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் மேல்மருவத்தூர் அருகேயிருந்து ராமாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் கல்பாக்கத்திற்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் வந்துள்ளனர்.

2 பேருந்துகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த 4 பேரும் உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலங்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article