சென்னை: அக்டோபர் 30ந்தேதி  முதல் நவம்பர் 2ந்தேதி  வரை 4 நாட்கள் காத்திருப்பு போராட்டம்  நடத்த உள்ளதாக  போக்குவரத்து தொழிற்சங்கமான சிஐடியு தெரிவித்து உள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 93 மாத அகவிலைப்படி நிலுவைகளை உடனே வழங்க வேண்டும். 1.12.2022 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். 5 சதவீத கட்டுப்பாட்டை நீக்கி வாரிசு வேலையை உடனே வழங்க வேண்டும். இ.ஆர்.பி.எஸ். நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். பணியில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்ட ஒப்பந்தத்தில் உள்ளபடி அமல்படுத்த வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தை காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்ற 7 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பல முறை போராட்டங்களை அறிவித்து, பின்னர் பேச்சு வார்த்தை காரணமாக போராட்டம் கைவிடப்பட்டு, கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், அவர்கிள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், உடனே நிறைவேற்ற வலியிறுத்தியும், கடந்த செப்டம்பர் மாதம் 1ந்தி போக்குவரத்து தொழிலாளர்களின் சிஐடியு சங்கம் தர்ணா போராட்டங்களை நடத்தியது.

இந்த நிலையில், அடுத்த கட்ட போராட்டத்தை சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்து உள்ளது. 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30ந்தேதி  முதல் நவம்பவர் 2ந்தேதி  வரை 4 நாட்கள் காத்திருப்பு போராட்டம்  நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.