சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் மற்றும் பெயர் சரிபார்ப்பு உள்பட பல்வேறு பணிகளுக்காக 4 நாட்கள்  வாக்காளர் முகாம் நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான தேதிகளையும் வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம்  அக்டோபர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் முகாம் நடைபெறும் தேதிகளை அறிவித்து உள்ளது. தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து அக்டோபர் 12ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதையடுத்து, அக்டோபர் மாதம்   13 ந்தேதி 14ந்தேதி, 27ந்தேதி, 28ந்தேதி ஆகிய 4 நாட்கள் (சனி, ஞாயிறு) வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த முகாமில்  வாக்காளர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.