சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிககள் 2 காலியாக உள்ள நிலையில், அதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளது.

அதிமுகiவச் சேர்ந்த கே.பி.முனுசாமி,  வைத்திலிங்கம் ஆகியோர், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வு பெற்றதால், தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவிகளை  ராஜினாமா செய்தனர். இதனால்,  காலியான 2 இடங்களுக்கு தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி,  அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் உள்ளதால், இரு எம்.பிக்களின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்து உள்றளது. அதன்படி,   திமுக மருத்துவர் அணி மாநில செயலாளர் மருத்துவர் கனிமொழி மற்றும் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ் இருவரும் போட்டியிடுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் கனிமொழி  மறைந்த மூத்த தலைவர் என்.வி.என் சோமு மகள். இவர்  இவர் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் மாதவரம் தொகுதியிலும், 2016 தேர்தலில் தி.நகர் தொகுதியிலும் போட்டியிட்டவர்.

திமுக வேட்பாளர்கள் 2 பேரும் வெற்றி பெறுவது உறுதி. இவர்களை எதிர்த்து அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. எனவே,  இருவரும் போட்டியின்றி தேர்வது உறுதியாகி உள்ளது. இதன்மூலம்  மாநிலங்களவையில் தி.மு.க. பலம் 10 ஆக அதிகரிக்கிறது.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் சுப.வீரபாண்டியனும், காங்கிரஸ் தரப்பில் ப.சிதம்பரமும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், தற்போது யூகங்களுக்கு திமுக தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.