பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது

Must read

சென்னை:
பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். இவரது பெற்றோர் வீடு சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருப்பதால் அடிக்கடி இங்கு வந்து செல்வது வழக்கம். மேலும் இவருக்கு கொலை மிரட்டல் இருப்பதால் தனியாக போலீஸ் பாதுகாப்பை பெற்று உடன் எப்போதும் காவலர் செல்வார்.

இந்நிலையில் நேற்றிரவு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் பைக்கில் வந்துள்ளார். அப்போது உடன் வந்த பாதுகாப்பு போலீஸ் பாலகிருஷ்ணன் டீ குடிக்கச் சென்றார். பைக்கில் சாலையோரமாக நின்றிருந்த பாலச்சந்தரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில், ரவுடி பிரதீப் மற்றும் அவரின் கூட்டாளிகளான சஞ்சய், கலை, ஜோதி ஆகியோரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கைது தனிப்படை போலீஸ் செய்தது.

More articles

Latest article