யாங்கூன்: மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் அதிர்ந்த நிலையில், அதிலுள்ள பொருட்களும் கீழே விழுந்துசிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தேர்தல் முறைகேடு தொடர்பாக மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்த மியான்மர் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ராணுவத்துக்கு  எதிராக  கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் இரண்டு வாரங்களாக பல வெவ்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.