ஜோகன்னஸ்பர்க்:

ந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-வது  கிரிக்கெட் டெஸ்ட் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தியா – தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தென். ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. முந்தையை இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்த இந்திய அணி, இன்று சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த தொடரில் முதல் முறையாக  இன்று‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோலி   பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 77 ஓவர்களில் 187 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 65.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்சில் இன்று 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது, இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவிற்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. மார்க்ராம் 4 ரன்களில் வெளியேற்றப்பட்டார். டீன் எல்கர், அம்லா பேட்டிங் செய்து விளையாடினர். தென் ஆப்பிரிக்கா 8.3 ஓவர்களுக்கு ஒருவிக்கெட் இழப்பிற்கு 17 ரன்களுடன் களத்தில் உள்ளது.

இந்த நிலையில்,  ஆடுகளத்தின் தன்மை அபாயகரமாக இருப்பதால் போட்டி நிறுத்தப்பட்டு உள்ளது.  அதாவது பந்து மிக அதிமாக பவுன்ஸ் ஆகிறது. இதனால் பேட்ஸ்மேன் மீது பந்து வேகமாக தாக்கும் அபாயம் உண்டு.

இதனால் போட்டியை கைவிடலாமா – தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து நடுவர்கள் இரு அணி கேப்டன்களுடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.