சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 3வது நாளான இன்றைய அமர்வில், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் வகையில், சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நேற்று முன்தினம் (பிப்ரவரி2ந்தேதி) தொடங்கியது. முதல்நாள் கூட்டத்திலேயே, ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு திமுக, கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்துவிட்டது.
கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம், மருத்துவர் சாந்தா உள்பட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதையடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.
3-வது நாளாக இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் தொடங்குகிறது. இன்றைய கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையிலான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் ஆளுநர் உரை குறித்து விவாதங்கள் நடைபெற உள்ளது.