டில்லி,

ரட்டை இலை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக டில்லி போலீசார் டிடிவி தினகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இன்றும் நேரில் ஆஜராக டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க, ர் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சனிக்கிழமை 8 மணி நேரம்  தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. பின்னர் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.  நேற்று பிற்பகல் தொடங்கிய இந்த விசாரணை நள்ளிரவை யும் தாண்டி 11 மணி நேரம் நீடித்தது.

அவரிடம்  உதவி ஆணையர் சஞ்சய் செராவத், துணை ஆணையர் மதுர் வர்மா ஆகியோர் துருவி துருவி விசாரணை நடத்தினார். மேலும் டிடிவியின் உதவியாளர்  ஜனார்த்தனன், நண்பர் மல்லி கார்ஜூனா ஆகியோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து  இன்று மாலையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தினகரனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.