சென்னை:  அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் வழக்கில் கைதான  முன்னாள் திமுக பிரமுகர் ஞானசேகரன் மீது 36 வழக்குகள்  உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக  காவல்துறை டிஜிபி இருந்தாலும், அவர்மீதான வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்ற கூறி உள்ளார்.

உயர்நீதிமன்றம், ஞானசேகரன் மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றலாமா என காவல்துறையிடம் கேள்வி எழுப்பிய நிலையில்,  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரன் மீது கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடந்த 2024 வரை மொத்தம் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளதுடன், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றம் கறிப்பிட்டுள்ளது.

ண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சென்னை கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் திமுக பிரமகர் என்பது தெரிய வந்தது. அவர் போனில் பேசிய யார் அந்த சார் என்பது தொடர்பான பல்வேறு கருத்துக்களை நிலவி வரும் நிலையில், அதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், அப்படி யாரும் இல்லை என்று கூறியதுடன், அவர் அந்த பெண்ணை மிரட்டும் நோக்கில் போனில் பேசுவதுபோல நடித்ததாக கூறியிருந்தது.

இதற்கிடையில் ஆளும் கட்சி ஆதரவாளரான ஞானசேகரன் மீதான வழக்குகளில் உண்மை நிலவரம் தெரிய வேண்டுமானார், வழக்கின் விசாரணையை  சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி,  இந்த வழக்கில், உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி தேஷ்முக் ஷேகர் சஞ்சய் தாக்கல் செய்துள்ளார். அதில்,  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது.

இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 13 சாட்சிகளிடம் மகளிர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்த வழக்கு தவிர, கடந்த 2010 முதல் கடந்த 2024 வரை ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்தது, பூட்டிக் கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டு மிரட்டி செல்போன்களை பறித்தது, சாஸ்திரி நகர் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச்சங்கிலியை பறித்து வழிப்பறியில் ஈடுபட்டது என மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் மீது பதியப்பட்ட 36 வழக்குகளில் 5 வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து தண்டனை விதித்துள்ளது. 9 வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு எதிரான எந்த வழக்கிலும் விசாரணை நிலுவையில் இல்லை என்பதால் அவர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூன் 12 அன்று தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

யார் அந்த சார்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்….

யார் அந்த சார்? அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது!