பிரதாப்கர்
நேற்று நள்ளிரவு ராஜஸ்தானில் ஒரு பேருந்து கவிழ்ந்ததில் 33 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் நகரில் இருந்து ராஜஸ்தானின் பிரதாப்கார் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 33 பயணிகள் இருந்தனர்.
பேருந்து ஹதுனியா கிராமம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. .அருகில் இருந்த உள்ளூர் வாசிகள் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த ஹதுனியா காவல் நிலைய காவல்துறையினர் , விபத்து நடந்த பகுதிக்குச் சென்று பயணிகளை உடனடியாக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையொட்டி கூடுதல் காவல்துறை சூப்பிரெண்டு ரிஷிகேஷ் மீனா, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.
[youtube-feed feed=1]