சென்னை: ஆதிச்சநல்லூா் அருகே திருக்கோளூரில் நடந்த அகழாய்வு பணிகளில் இதுவரை 324தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என தொல்பொருள் ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில், தொல் பொருள்துறை ஆய்வு நடத்தி வருகிறது. மத்திய தொல்லியல்துறை யின் திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப் பணிகள் கடந்த 2021  ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வுப் பணியில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஆதிச்சநல்லூர் பரம்புப் பகுதியில் மூன்று இடங்களில்  அகழ்வாய்வு பணிகள் நடந்துவருகின்றன. இதுவரையிலும் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  முதுமக்கள் தாழியின் மூடியில் பதியப்பட்ட பனையோலைப் பாயின் அச்சு இந்த அகழாய்வுப் பணிகளின்போது பல பொருள்கள் கிடைத்துள்ளன.  அனைத்து முதுமக்கள் தாழிகளின் மூடிகளும் கூம்பு வடிவில்தான் இங்கே காணப்படும். ஆனால், தற்போது கிடைத்த ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் உள்ளது. அந்தத் தட்டை வடிவிலான பகுதியில் பனையோலைப் பாய் பதிந்த அச்சு காணப்படுகிறது. இதுகுறித்துத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்கள்.  முதுமக்கள் தாழியின் மூடி இதை வைத்துப் பார்க்கும்போது 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது

மேலும்,  தங்கத்தால் ஆன நெற்றிப் பட்டம், வெண்கலத்தால் ஆன மோதிரம், இரும்பு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.எ வெண்கல வளையல், மோதிரம், கண்ணாடி மணிகள், சீலை, சீன பானை ஓடுகள் உள்பட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது.  தொடர்ந்து பழைமையான நாகரித்தைச் சார்ந்த பொருள்கள் கிடைத்துவருவதால் தொல்லியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.  முதல்கட்டமாக ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதியில் மத்திய தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

ஆதிச்சநல்லூா் அருகே திருக்கோளூரில் நடந்த அகழாய்வுப் பணிகளில் இதுவரை  324 தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூா் அகழாய்வின் போது கண்டெடுக்கப்படும் பொருள்களைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் எப்போது தொடங்கும் என பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆதிச்சநல்லூர்  திருநெல்வேலி நகரத்திலிருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம் “ஆதி தச்சநல்லூர்”. உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று. 1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]