சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் வாக்களிக்கும் வகையில், சென்னையில் இருந்து 3ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட இருப்பபதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் தங்களது ஊர்களுக்கு சென்று, ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் நாளை முதல் 5ந்தேதி வரை 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை (1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. 4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க WWW.tnstc.in.tnstc செயலி மூலமாகவோ, பேருந்து நிலையத்தின் முன்பதிவு மையம் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]