டில்லி,

மிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீசாருக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

பண மோசடி குற்றச்சாட்டு காரணமாக அவர்மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

வீடு காலி செய்வது தொடர்பாக திருவாரூர் மாவட் டம் நீடாமங்கலம் அருகே உள்ள கீழவாழாச்சேரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் எஸ்விஎஸ் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் காரணமாக உச்சநீதி மன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

சென்னையில் உள்ள இவரது பங்களாவில் வாடகைக்கு குடியிருந்த நபரை காலி செய்ய வைப்பதற்காக சட்டமன்ற தேர்தலுக்கு முன் தற்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜிக்கு அவரது உறவினர் ராமகிருஷ்ணன் மூலம் குமார் இரண்டு தவணையாக ரூ.30 லட்சத்தை குமார் கொடுத்ததாகவும்,  ஆனால் பேசியபடி வீட்டை காலி செய்து தரவில்லை.

தேர்தல் முடிந்து அமைச்சரான காமராஜிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு தன்னை மிரட்டிய தாகவும் இதுகுறித்த புகாரை போலீசார் ஏற்காதால் ஐகோர்ட்டில் சில நாட்களுக்கு முன் குமார் மனுதாக்கல் செய்தார்.

ஐகோர்ட்டு உத்தரவிட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்யாததால், மனுதாரர்  உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரித்த உச்சநீதி மன்றம், அமைச்சர் காமராஜ் மீது எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது வருமான வரித்துறை அதிகாரியாக மிரட்டியதாக 3 அமைச்சர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.