சென்னை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு தமிழகஅரசு ஒரு வாரம் விடுமுறை வழங்கியதையடுத்து, அவர் தனது சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார்.

தமிழகத்தில் தீவிரமடைந்து தொற்று பரவல், சிறைக்கைதிகளிடையேயும் பரவி வருகிறது. இதன் காரணமாக, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்,  பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. பேரறிவாளன் நிலையைக் கருத்தில் கொண்டும், அவரது உடல்நிலை மற்றும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு விடுப்பு வழங்கிட வேண்டும் என, அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே 18 அன்று முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று தமிழகஅரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்துஉத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று பேரறிவாளன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த போலீஸ் பாதுகாப்புடன் தன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

பரோலில் உள்ள பேரறிவாளன் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது, கூட்டங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட சிறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற விதியின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.