சென்னை

தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் இதுவரை தமிழகத்தில் 30 பேர் ஜே என் 1 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,

“இதுவரை தமிழகத்தில் ஜே.என்.1 கொரோனாவால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதைப் போல் மற்ற மாவட்டங்களில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவல் பாதிக்கப்பட்ட அனைவரையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.   இதனால் வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் 4 நாட்களிலேயே குணமாகிவிடுகின்றனர். தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்பதால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.

என்று தெரிவித்துள்ளார்.