டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 20,408 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 20,958 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதனப்டி, நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும், 20,408 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,00,138 ஆக உயர்ந்தது.
கடந்த 24மணி நேரத்தில் மேலும், 54 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,312 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.
நேற்று ஒரே நாளில் 20,958 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை 43,33,0442 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.48% ஆக உயர்ந்துள்ளது.து.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,384பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2,03,94,33,480 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 33,87,173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.