சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதியில் லாரி புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பகுதியில் தங்கியிருந்த பெண்  விவசாயிகள் 3 பேர் பலியாகினர். இந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் மீது கார் மீது, மத்திய அமைச்சரின் மகனின் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மொத்தம் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   விவசாயிகள் மீது காரை ஏற்றியது தொடர்பாக மத்திய இணையமைச்சர் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஹரியானா எல்லையில் பல மாதங்களாக முகாமிட்டு, வேளாண் சட்டத்துக்குக்கு எதிராக போராடும் விவசாயிகள் தங்கியுள்ள பகுதியில் இன்று காலை லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.

டெல்லி எல்லைப் பகுதியில் திக்ரி எல்லை அருகே ஜாஜர் சாலையில் இன்கறு காலை 6.30 மணி அளவில் திடீரென தறிகெட்டு ஓடிய  லாரி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது ஏறியது. அப்போது, அங்கு உட்கார்ந்துகொண்டிருந்த பெண் விவசாயிகள் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் பலியாகி  உள்ளனர். அவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த துயர சம்பவம் இன்று காலை 6.30 மணி அளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.