டில்லி,

வ்வொரு ஆண்டும் ஜனவரி 15ந்தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ராணுவத்தினர் தங்களது சாகங்களை செய்து காட்டுவர்.

இந்நிலையில், ராணுவத்தினத்தை முன்னிட்டு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த  விமானப்படை வீரர்கள் 3 பேர், தாங்கள் உபயோகப்படுத்திய  கயிறு அறுந்து விழுந்ததால் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக  இந்திய இராணுவத்திற்கு  தளபதியாக ஆங்கிலேயே அதிகாரிகள் இருந்தனர். 1947ம் ஆண்டு  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற தினமான  ஜனவரி 15-ம் தேதி இந்திய இராணுவ தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான ஒத்திகை இன்று காலை த்ருவ் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்க முயன்றபோது,  கயிறு அறுந்து மூன்று இராணுவ வீரர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மூன்று வீரர்களும் நன்றாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது பரபரப்பை ஏற்படுத்தியது.