சென்னை: சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள், பாதாள சாக்கடை திட்டம், மகளிர் இலவச பயண நிதி ஒதுக்கீடு செய்து நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்து வருகிறார்.

அதில்,  சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடி செலவில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் சுவரொட்டிகளே இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்

சுத்தமான பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0. செயல்படுத்தப்படும்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்.

கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை – ஸ்ட்ரான்ஸ் சாலை, தியாகராய நகரில் உள்ள தெற்கு உஸ்மான் சாலையில் ரூ. 335 கோடி மதிப்பில் பாலங்கள் கட்டப்படும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர இருக்கும் சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்.

சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்த ரூ. 87 கோடியில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் நிறுவப்பட்டு முக்கிய நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ. 2058 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவு நீர் நீர் கலப்பதை தடுப்பதற்காக ரூ. 2371 கோடியில் திட்டம் தீவிரமாக செயபடுத்தப்படும்.

மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக ரூ.703கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.