சென்னை: சட்ட சபையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு கூறினார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதமில்லா முறையில் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டது.. இதையொட்டி கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளில் கணினி பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது.

இன்று காலை சபை கூடியதும், காலை 10மணி அளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சபாநாயகர்அப்பாவு அழைத்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தாங்கள் பேச வேண்டும் என சபாநாயகரிடம் அனுமதி கோரினர். ஆனால், அவரை பேச அனுமதிக்க மறுத்த சபாநாயகர், பட்ஜெட் விவாதத்தின்போது பேச வாய்ப்பு தரப்படும் என்றார். இதனால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், சபாநாயகர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுகவினர் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

சபையை விட்டு வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியதுடன், வெள்ளை அறிக்கை வெற்று அறிக்கை என்றும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியை கைப்பற்றியது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி பேசும் ஆடியோ….