மாலி
இந்தியப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவர் லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட, பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். பிரதமர் மோடி இது தொடர்பான புகைப்படங்களைத் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
மோடி அந்த பதிவில்,
“லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பைப் பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்”
எனத் தெரிவித்து இருந்தார்.
மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடியின் இந்த பதிவு குறித்து கேலி செய்யும் வகையிலும், இந்தியர்கள் மீது இனவெறியை காட்டும் வகையிலும் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்தனர். இந்தியர்கள் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்திவுக்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது.
மாலத்தீவு அரசு தங்கள் அமைச்சர்கள் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. தற்போது பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சகைகளை மாலத்தீவு அரசு இடை நீக்கம் செய்துள்ளது.