சென்னை: நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,
நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel