சென்னை
தமிழகத்தில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அதில்,
”தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சிறப்புச் செயலாளராக மாற்றப்பட்டார்.
தமிழக சாலைப் பிரிவு திட்டம்-2 திட்ட இயக்குநர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
‘தமிழகத்தின் சர்வே மற்றும் செட்டில்மென்ட்’ இயக்குநர் மதுசூதன் ரெட்டி, முதல்-அமைச்சரின் முகவரித் துறையின் சிறப்புப் பணி அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.”
என்று கூறப்பட்டுள்ளது.