கள்ளக்குறிச்சி : பட்டாசுக் கடை தீ விபத்தில் மூவர் பலி

Must read

ள்ளக்குறிச்சி

ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவர் பட்டாசுக் கடை வைத்துள்ளார். இங்கு திடீர் என தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறி உள்ளன.  இந்த கடையில் வேலை பார்த்து வந்த 5 பேர் தீயில் சிக்கி உள்ளனர்.  இந்த பட்டாசுக் கடை அருகில் உள்ள பேக்கரியில் தீ பரவி கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி உள்ளன.

அங்கும் பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டு கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.   இந்த பயங்கர தீவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.  தவிர 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் தீ சற்றே குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த தீவிபத்தில் ஏற்பட்டுள்ள பொருட்சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.      இப்பகுதி மக்களை இந்த விபத்து கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More articles

Latest article