ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில், பல கட்டிடங்கள் தரைமடட்மானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவுகோலில்  பயங்கர  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில்,  மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதுபோல மாநில கவர்னரின் அலுவலகம் மற்றும் பல்வேறு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும்  கூறப்படுகிறது. மருத்துவமனையில், நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும்  பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாக உள்ளது.

மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  முதல்கட்ட தகவலின்படி, இதுவரை  3 பேரின் உடல்கள்  மீட்கப்பட்டுள்ளது. 24 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.