மிஸ் பண்ணிடாதீங்க: சென்னை தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா….

Must read

சென்னை: சென்னை தலைமைச்செயலகம் அருகே உள்ள  தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை உணவு பாதுகாப்பு துறை  நடத்துகிறது. அத்துடன், பொதுமக்களை கவரும் வகையில்,  பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாளை உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது.

இந்த உணவுத்திருவிழா நாளை (12ந்தேதி) முதல் 14ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இறுதியான  14-ந்தேதி காலை 7 மணியளவில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்படுகிறது.

இந்த உணவு திருவிழாவில் திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,  உணவு வீணாகுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இங்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article