ண்டன்

ங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் முப்பரிமாண கண் விழியின் படங்களை கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் முறையை கண்டறிந்துள்ளனர்.

முப்பரிமாண படங்கள் என்பது பெரும்பாலும் பார்ப்போரின் மனமகிழ்வுக்காக அச்சடிக்கப்படுவதாகும்.    ஒரு சில நேரங்களில் பொறியியல் துறையில் முப்பரிமாண படங்கள் கருவிகள் வேலை செய்வதை விளக்க உபயோகப் படுகின்றன.    அதை மேலும் பல இடங்களில் பயன்படுத்துவது குறித்து இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸ்டில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கண் விழிகளில் ஏற்படும் காயங்களினால் கண் பார்வை பாதிப்பு பெருமளவில் உண்டாகிறது.  தீக்காயங்கள்,  விபத்தில் அடிபடுதல் மட்டும் இன்றி  ஒரு சில நோய் தொற்றுகளாலும் விழிப்படலத்தில் காரணம் தெரியாமல் காயங்கள் உண்டாவதாலும் பார்வை முழுவதுமாக பாதிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.   இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டோருக்கு விழி மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவே மீண்டும் தற்போது பார்வை கிடைத்து வருகிறது.

விழிப்படலத்தில் ஏற்படும் பாதிப்புக்காக முழு விழிகளை மாற்றுவது மிகவும் நேரம் மற்றும் பணம் செலவாகும் விஷயமாகும்.   மேலும் விழி தானம் செய்வோருக்காக பல நேரங்களில் காத்திருக்க வேண்டி உள்ளது.   இந்நிலையில் கண் விழிகளின் முப்பரிமாண படங்கள் மூலம் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை உடனடியாக சீரமைக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஏற்கனவே நடத்திய சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இன்னும் சோதனை முழுமை அடையவில்லை என தெரிவித்துள்ளனர்.   இதற்கு ஒரு சில வருடங்கள்  ஆகலாம் எனவும் அதற்கு பிறகு விழி மாற்று அறுவை சிகிச்சைகள் வெகுவாக குறைந்து பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் கண்பார்வை மீண்டும் கிடைக்கும் எனவும் கூறுகின்றனர்.