டில்லி:

மிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை 28ந்தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

தற்போதைய நிலையில், திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது, அதுபோல ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கும் வாபஸ் பெற்றப்பட்டது. இந்த நிலையில், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம்  உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி  திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

‘அப்போது, நாளைய தினமே வழக்கினை விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நாளைய தினம் நிறைய வழக்குகள் பட்டியலிட்டிருப்பதால் விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், வரும் 28ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதியுடன், எம்எல்ஏ கனகராஜ் மறைவை தொடர்ந்து, காலியாக அறிவிக்கப்பட்ட சூலூர் தொகுதி உள்பட 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.