கேப்டவுன்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில், 341 ரன்களைக் குவித்துள்ளது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் பந்துவீச்சை பிரித்துமேய்ந்து விட்டது.
அந்த அணியின் துவக்க வீரர் குவின்டன் டி காக் 80 ரன்களை அடித்தார். பவுமா 92 ரன்களை அடித்தார். அதேசமயம், வான் டெர் டுசேன் 37 பந்துகளில் 60 ரன்களையும், டேவிட் மில்லர் 27 பந்துகளில் 50 ரன்களையும் அதிரடியாக அடிக்க, அந்த அணியின் எண்ணிக்கை வேறுநிலைக்குச் சென்றது.
முடிவில், 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்களை சேர்த்தது அந்த அணி. பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப்புக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன.