டில்லி:

2ஜி ஸ்பக்ட்ரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு தேதி வரும் நாளை 25 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது. சுமார் ஆறு வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு பெற்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 2ஜி  வழக்கில் தீர்ப்பு தேதி எப்போது வழங்கப்படும் என்பது ஆகஸ்ட் 25ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், அதிலிருந்து 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்றும் நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு வழக்கில் செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.