டெல்லி: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 280 நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்துள்ளன என்று மத்தியஅமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து வாழ்வாதாரத்தை தொலைத்தனர். இன்னும் தொற்று பரவல் முழுமையாக விலகாத நிலையில், பெருநிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என அனைத்து தரப்பு நிறுவனங்களும் கடுமையாக சரிவை சந்தித்துள்ளன. இந்திய பொருளாதாரமே தலைகீழாக உள்ளது.

இதுகுறித்து நாடு முழுவதும் ஆய்வு நடத்திய  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் (என்.சி.எல்.டி) கடந்த ஆண்டு (2020) நாடு தழுவிய பூட்டுதல் அறிவிக்கப்பட்ட பின்னர் தொற்றுநோய்க்கு மத்தியில் மொத்தம் 283 நிறுவனங்களை நொடித்துப் போனதாக ஒப்புக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு, எழுத்துப்பூர்வமாக , பெருநிறுவன விவகார அமைச்சர் அனுராக் தாக்கூர், பதில் தெரிவித்தார். அதில்,

ஏப்ரல் 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2020 காலகட்டத்தில், மொத்தம் 76 கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாகி உள்ளது என்றும்,  திரும்பப் பெறுதல் அல்லது மேல்முறையீடு அல்லது தீர்வு காரணமாக 128 சி.ஐ.ஆர்.பி கள் மூடப்பட்டன, மேலும் 189 நிறுவனங்கள் கலைக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.