சென்னை:

மிழகம் முழுவதும் சுமார் 275 புதிய பேருந்து சேவையினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில்  கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

தமிழக மக்களின் போக்குவரத்து சேவைக்காக புதிய 275 பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை வாங்கியுள்ளது. இந்த பேருந்துகளின் சேவை இன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னைக்கு 17 பேருந்துகள் உள்பட விழுப்புரத்திற்கு 72 பேருந்துகள், சேலத்துக்கு 43 பேருந்துகள், கோவைக்கு 75 பேருந்துகள், கும்பகோணத்த்துக்கு 68 பேருந்துகள் என மொத்தம் 250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இயக்கப்படும்  பேருந்துகளில் தானியங்கி கதவுகளுடன் அகலமான தாழ்தளப் படிக்கட்டுகள், தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்துப் பேருந்துகளிலும் நின்று பயணிக்க அகலமான பாதை, பேருந்தின் இருபுறமும் அவசரகால வழிகள், இறங்கும் இடத்தை அறிவிக்க ஒலிபெருக்கி வசதி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் இருக்கையில் ஊன்றுகோலை வைக்க இடம், அவர்கள் இறங்கும் இடத்தை தெரிவிக்க பெல் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பேருந்துகளின் எல்.ஈ.டி. வழித்தடப் பெயர்ப் பலகைகள், ஓட்டுநருக்கு மின்விசிறி, பேருந்துக்குள் எல்.ஈ.டி. விளக்குகள் பேருந்து பின்புறம் வருவதை எச்சரிக்க ஒலி எச்சரிக்கைக் கருவி போன்ற வசதிகளும் இடம் பெற்றுளன.